R.Maheshwary / 2022 ஜூலை 05 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவின் ஏற்பாட்டில் கொடகம்பொல பிரிவின் பம்பேகம தோட்டத்தில் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் பதிவுகள் நடமாடும் சேவை நாளை (6) நடைபெறவுள்ளது.
பம்பேகம தோட்டத்தின் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நாளை காலை 9 மணி தொடக்கம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் சந்தன அனுருத்த பியதாச தெரிவித்தார்.
பம்பேகம தோட்டத்தை அண்மித்து வாழும் மக்களுள் சுமார் 40 பேருக்கு பிறப்பு சான்றிதழைப் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த தோட்டத்தில் இதுவரை சட்டரீதியாக திருமண பதிவின்றி குடும்பமாக வாழ்ந்து வரும் 10 பேருக்கு சட்டரீதியான பதிவு திருமணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மக்கள் அபிவிருத்தி மன்றம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றது.
அத்துடன் பதிவாளர் திணைக்களம், பம்பேகம தோட்ட நிர்வாகம் மற்றம் சீதாவக்க பிரதேச செயலக அலுவலகம் என்பனவும் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago