Gavitha / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில், தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்களில் ஏறும் பயணிகளுக்கு, பயணச் சீட்டை வழங்குவதைக் கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பயணிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, இராகலை, கந்தப்பளை, வலப்பனை, தலவாக்கலை, பூண்டுலோயா போன்ற பிரதான நகரங்களில் இருந்து மற்றைய நகரங்கள் உள்ளிட்ட பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் ஏறும் பயணிகளுக்கு, பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை என, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவை நிலையங்களிலும், வாடிக்கையாளர் பதிவு புத்தகம் பேணப்பட்டு வருகின்ற நிலையில், பயணிகள் பஸ்ஸில் ஏறும்போது, பஸ்ஸின் இலக்கம், தொடர்பிலக்கம் ஆகியவை அச்சிடப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்படல் வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பஸ்களில் இவ்வாறு பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பஸ்களில் இவ்வாறு கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொள்வதாகவும் இதனால், வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் பயணிகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என பயணிகள் கோரியுள்ளனர்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026