2025 மே 14, புதன்கிழமை

பயணிகளுக்கு வடிகானால் அசௌரியம்

Freelancer   / 2023 மார்ச் 16 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்ஆஸிக்

 

கண்டி- வத்துகாமம் பிரதான வீதி, மடவளை நகரத்தின் பிரதான சந்தியில் பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வடிகானால் அங்கு வரும் பயணிகள் அசௌரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

பஸ்தரிப்பிடத்துக்கு வரும் பயணிகளுக்கு குறித்த வடிகான் இடையூறாக உள்ளதுடன், மழைகாலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதற்கு இவ்வடிகான் காரணமாக உள்ளதாக பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

வீதி அபிவிருத்திப் பணிகள் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளமையால் இந்நிலைமை தோன்றியுள்ளது.

எனவே, வடிகானை முறையாக அமைத்து வீதியை சீராக்குவதற்கு அல்லது இவ்விடத்தில் இருந்து பஸ் தரிப்பிடத்தை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X