2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

போரை நிறுத்தக் கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Janu   / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போரை உடனடியாக நிறுத்த கோரி, சோசலிச சமத்துவ கட்சியினால் (SEP) ஞாயிற்றுக்கிழமை (26) அன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.   

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பானி விஜேசிறிவர்தன பின்வருமாறு கருத்து தெரிவிக்கையில்,

"ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்துள்ள இந்த போர், வெறும் மத்திய கிழக்கு பிராந்திய போராக மட்டும் நின்றுவிடாமல், உலகளாவிய ரீதியில் ஒரு பாரிய நெருக்கடியாக விரிவடைவதற்கான அபாயம் காணப்படுகிறது.

இந்த போரானது இறுதியில் சீனா மற்றும் ரஷ்யா வரை பரவி, ஒரு அணு ஆயுத உலக போராக மாறுவதற்கான அச்சம் நிலவுகிறது. அவ்வாறானதொரு அணு ஆயுத போர் உருவானால், அது மனிதகுலத்திற்குப் பாரிய அழிவை ஏற்படுத்தும் ஒரு பயங்கரமான நிலைமையாக அமையும்," என எச்சரித்தார்.

சுதத் எச். எம். ஹேவா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .