Kogilavani / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
சிவனொளிபாதமலையின் 2020ஃ2021 ஆண்டுக்கான பருவகாலம், பௌர்ணமி தினமான நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இதனையொட்டி, பெல்மதுளை கல்பொத்தாவலை ஸ்ரீ ரஜ மகா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமன் தெய்வத்தின் திருவுருவச் சிலை, ஆடை, ஆபரணங்கள் தாங்கிய இரத பவனி, இன்று (28) திங்கட்கிழமை காலை ஆரம்பமானது.
இந்த இரத பவனி இரத்தினபுரி- கினிகத்தேனை, பெல்மதுளை- பலாங்கொடை, பெல்மதுளை- இரத்தினபுரி, பெல்மதுளை- இரத்தினபுரி ஆகிய நான்கு வழிகளின் ஊடாக, சிவனொளிபாத மலையை இன்று (28) மாலை வந்தடையவுள்ளன.
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக, இந்தப் பவனி இடம்பெறவுள்ளது.
இடைவழியில் மக்களின் வழிபாட்டுக்காக வாகனப் பேரணி நிறுத்தப்படாது என்பதுடம் பேரணியில் பங்கேற்க 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பருவகாலம் 2021 ஆண்டு மே மாத மௌர்ணமி தினத்தன்று முடிவடையவுள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago