Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 15 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜா
பொகவந்தலாவை பிரதேச மாணவர்களின் நலன் கருதி, பற்சிகிச்சை முகாமொன்று, பொகவந்தலாவை சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
பொகவந்தலாவை லயன்ஸ்கிளப் 306C2இன் அனுசரணையில், அதன் தலைவர் பி.ஜோன்சன் ரவி தலைமையில் நடைபெற்ற பற்சிகிச்சை முகாமில், மாவட்ட சுகாதார சேவை திணைக்களத்தின் பல் வைத்தியர்கள் 11 கலந்துகொண்டனர்.
இம்முகாமில், பொகவந்தலாவை பிரதேச பாடசாலைகளான சென்மேரிஸ் மத்திய கல்லூரி, ஹோலிறோசரி த.ம.வி, கெம்பியன் த.ம.வி, டியன்சின் த.வி, பெற்றோசோ த.வி, கெர்கஸ்வோல்ட் இல.2 த.வி மற்றும் பொகவான கில்லார்னி த.வி, லொயினோன் த.வி, தர்மகீர்த்தி சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 750 மாணவர்கள் பயன்பெற்றனர்.
இந்நிகழ்வுக்கு, பூரண ஒத்துழைப்பை world vision Uniliver கம்பனி மற்றும் லயன்ஸ் கிளப்பின் மாவட்ட இணைப்பாளர் எல்.சசிகுமார், பொகவந்தலாவை லயன்ஸ் கிளப்பின் செயலாளர் என்டனி ஜோர்ஜ், பொருளாளர் ஆ.பழனியாண்டி, பணிப்பாளர் பி.ஜெயக்குமார், ஏ.அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .