Janu / 2026 மார்ச் 12 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிபிட்டிய - கொழும்பு பிரதான வீதி, பெல்மதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாத்தக்கடை பகுதியில், புதன்கிழமை(11) அன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி புனித லூக்ஸ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபரான 52 வயதுடைய அமில தண்டக்கார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டிற்கு தேவையான இரவு உணவை, அருகில் உள்ள உணவகத்தில் வாங்கிக்கொண்டு, வீதியோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
உடனடியாக காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (12) காலை உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், இதற்கு முன்னர் பெல்மதுளை தர்மாலோக்கா மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மதுளை பொலிஸார், மேற்கொண்டு வருகின்றனர்.
உமாமகேஸ்வரி

9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago