2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பலா மரக்குற்றிகள் மீட்பு

மு.இராமச்சந்திரன்   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தலனை வனத்தில், வெட்டப்பட்ட நிலையிலிருந்த ஒரு தொகை பலா மரக்குற்றிகளை, அதிரடிப் படையினர், புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி வனப் பகுதியில், சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவதாக மஸ்கெலியா அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, புதன்கிழமை மாலை கொத்தலனை வனப்பகுதியைச் சுற்றி வளைத்து, படையினர் தேடுதல் நடத்தியபோதே, பலா மரக்குற்றிகளை மீட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் இவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அதிரடிப்படையினர், மீட்கப்பட்ட மரக்குற்றிகளை, நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X