2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

பலாக்காயுடன் வந்தவரின் குடும்பத்தையே பட்டினியில் போட்ட வி.ஐ.பி

Editorial   / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவிசேட பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவர் ஐவர் அடங்கிய ஒரு குடும்பத்தையே பட்டினியால் வாட செய்த சம்பவமொன்று கம்பளை, வாரியகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

பலாக்காயை  தோளில் சுமந்திருந்த தந்தையும் சிறு பிள்ளையும் அதிவிசேட பிரமுகர் கடந்து செல்லும் வரை அவ்விருவரையும் பிடித்து வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. 
 

இதனால் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் மதிய உணவை இழந்ததாக தந்தை கூறினார்.

கண்டி தலதா பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவை பார்வையிடுவதற்காக கண்டிக்கு வந்துள்ள இந்த அதிவிசேட பிரமுகர், பெரஹரா ஆரம்பிப்பதற்கு முன்னர், வாரியகல பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மதிய உணவை உண்பதற்காக சென்றுள்ளார்.

பிரமுகர் யாருக்கும் தெரிவிக்காமல் இந்த பகுதிக்கு வந்திருந்துள்ளார். எனினும், அந்த தகவல்  அப்பகுதி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு   கிடைத்தது.

இதற்கிடையில்இ அப்பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மதிய உணவிற்கு பலாக்காய் ஒன்றை பிடுங்கி, தோளில் சுமந்தவாறு, வந்துள்ளார். 

அதிவிசேட பிரமுகர் திரும்பிச்செல்லும் அந்த வீதியில்,    சிறுவனுடன் ஒருவர் வருவதைக் கண்டு, பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.
 
மூன்று குழந்தைகளும் மனைவியும் பசியுடன் இருக்கின்றனர். ஆகையால் பகல் உணவுக்கு பலாக்காயை அவிப்பதற்கு  எடுத்துச் செல்வதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். 

பலாக்காயை கொண்டுவந்த தந்தையையும் பிள்ளையையும் பொலிஸார்; அழைத்துச் சென்று, அப்பகுதியை விட்டு அதிவிசேட பிரமுகர் வெளியேறும் வரை வீதியோரத்தில் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். 

இதன் காரணமாக அன்றைய மதியம் தானும் மனைவியும் 3, 7 மற்றும் 9 வயதுடைய பிள்ளைகளும் பட்டினியால் வாட நேர்ந்ததாகவும் தந்தை கூறினார்.

அவர்களின் வீடு, புடவை மற்றும் சீட்டுகளால் ஆனது என்றும் தனக்கு வேலை இல்லை என்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவதாகவும் தந்தை கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X