2025 மே 03, சனிக்கிழமை

பலாங்கொடை நகர சபையில் அமளி துமளி

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை நகரசபையின் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அதிகாரத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து,  ஆளும், எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

இந்நிலையில், திடீரென சுகவீனமுற்ற நகரசபைத் தலைவர் சமிக்க வெவே கெதர, சபையை விட்டு வெளியேறத் தீர்மானித்ததுடன், சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு, உப தலைவர் எம்.ரீ.எம். ரூமியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும், உப தலைவர், இந்த வேண்டுகோளை நிராகரித்துள்ளார்.

சபையின் அமைதி சீர்குலைந்ததை அடுத்து, நகரசபைத் தலைவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, அவர் பலாங்கொடை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X