Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவா ஸ்ரீதரராவ்
பலாங்கொடை பிரதான வைத்தியசாலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஐந்து மாடி வார்ட்டுத்தொகுதி என்பன, எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர், மீண்டும் நோயாளர்களின் பாவனைக்காக திறக்கப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர், நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பலாங்கொடை பிரதான வைத்தியசாலையில், புதிதாக அமைக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஐந்து மாடி வார்ட்டுத்தொகுதி என்பன, திறந்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் பூர்த்தியான நிலையிலும், இதுவரை நோயாளர்களுக்கு இதன் மூலம் எவ்வித சேவையும் வழங்காமல் மூடப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந்நிலையில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, நேற்றைய தினம்(24), மேற்படி வைத்தியசாலையை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அது பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சபையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டாலும், தற்போது மூடப்பட்டுள்ள பலாங்கொடை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஐந்து மாடி வார்ட்டுத்தொகுதி என்பனவற்றின் குறைபாடுகள் அனைத்தும், கூடிய விரைவில் பூர்த்தி செய்யப்பட்டு, நோயாளர்களின் நன்மை கருதி, எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர், மீண்டும் திறந்து வைக்கப்படும் என்று கூறிய அவர், சப்ரகமுவ மாகாணத்தில், சுகாதாரத்துறையில் பெளதீக வளங்கள் மற்றும் ஏனைய குறைபாடுகள் ஏற்படுமாயின், அது குறித்து தமக்கு உடனடியாக அறியத்தருமாறு, அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சர் பானு முனிப்பிரிய, மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் எம்.பி. என்.குமாரகே, மாகாண சுகாதார பணிப்பாளர் கபில கண்ணங்கர, பலாங்கொடை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பீ.எம்.சீ.தசநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, மேற்படி வைத்தியசாலையில், 1300க்கும் அதிகமான நோயாளர்கள் நாளாந்தம், சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
24 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
33 minute ago
49 minute ago