Janu / 2026 மார்ச் 12 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - டயகம பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போடைஸ் (Fordyce) N.C பிரிவு பகுதியில் வியாழக்கிழமை (12) காலை 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டன், டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி சென்ற முச்சக்கர வண்டியே, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தேயிலை மலைப்பகுதியினுள் சுமார் 75 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாரதி, 1990 சுவசெரிய ஆம்புலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனைய இருவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செ.தி. பெருமாள்


9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago