2025 மே 15, வியாழக்கிழமை

பள்ளத்தில் பாய்ந்த பஸ் பத்திரமாய் மீட்டெடுப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுதத் எச்.எம்.ஹேவா

 

நோர்டன்- தியகல வீதியில் ஹூங்குல வளைவுக்கு அண்மையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளான தனியார் பஸ், பத்திரமாய் மீட்டெடுக்கப்பட்டு, பிரதான வீதிக்கு நேற்று முன்தினம் (20) கொண்டுவரப்பட்டது.

19 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பெண்கள் இருவர் உட்பட மூவ​ர் பலியாகினர். ஆணின் சடலம் 12 மணிநேரத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டது. அத்துடன் இந்த சம்பவத்தில் 26 பேர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹோமகம பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிக்கொண்டு சென்றிருந்த பஸ், ஹோமாகமவுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டிருந்​தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .