2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பழுதடைந்த பழங்களுடன் வியாபாரி கைது

Kogilavani   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்

அக்குறணை  நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த ஒரு தொகை அப்பில் பழங்கள் மற்றும்  திராட்ச​ப்  பழங்களுடன் வியாபாரியை, பொது சுகாதார பரிசோதகர்கள், செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

அக்குறணை நகரில், பழுதடைந்த அப்பில் மற்றும் திராட்சைப் பழங்கள் ​விற்பனை செய்யப்படுவதாக  கிடைக்கப்பெற்ற  முறைப்பாடுகளையடுத்து, மேற்படிப் பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதார பரிசோதர்கள், பழுதடைந்த பழங்களுடன் வியாபாரியை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, சுமார்  132 கிலோகிராம்  திராட்சைப்பழங்களும்  5,000 அப்பில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பழங்களை, உரிமையாளரின் அனுமதியுடன் மண்ணெண்ணெய் இட்டு அழித்துள்ளதுடன்,  வியாபாரியை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .