2025 மே 08, வியாழக்கிழமை

பழுதடைந்த மீன்கள் அழிப்பு

Kogilavani   / 2020 நவம்பர் 05 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் நகர மத்தியிலுள்ள மீன் விற்பனை நிலையத்தில், பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்ட மீன்கள், சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இன்று (5) அழிக்கப்பட்டன.

மேற்படி மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, கடந்த 25 ஆம் திகதி மேற்படி நிலையம் மூடப்பட்டதால், மீன் விற்பனை நிலையத்திலிருந்த மீன்கள் முறையாக அழுகியதுடன் துர்நாற்றமும் வீசத் தொடங்கியது.

இது தொடர்பில், வர்த்தகர்கள் பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கியத் தகவலுக்கு அமைய, மீன்விற்பனை நிலையத்திலிருந்த பழுதடைந்த மீன்கள் மீட்கப்பட்டு, அவை சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக, அழிக்கப்பட்டன. அத்துடன் மீன் விற்பனை நிலையத்திலும் கிருமிதொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரிலுள்ள மேற்படி நபரின் மீன்விற்பனை நிலையத்திலுள்ள மீன்களையும் அழிப்பதற்கு, தலாவக்கலை-லிந்துலை நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X