Janu / 2025 மே 15 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர் கவிழ்ந்ததில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சுமார் 13,000 லீட்டர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பவுசரில் பெட்ரோல் 13,800 லீட்டர் மற்றும் டீசல் 13,200 லீட்டர் ஏற்றிச் சென்ற போது ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய வீதியில் உள்ள கிளன்ட்ரானன் தோட்ட பகுதியில் வைத்து , பவுசர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பவுசர் மூலம் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் கசிந்த நிலையில் உள்ளூர்வாசிகள் அதை எடுத்துச் சென்றுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக, அதிக அளவு எரிபொருள் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கும் பவுசர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கீழே உள்ள பல தேயிலைத் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் குடிநீர் பெறும் நீர் தளங்களுக்கும் சேர்ந்துள்ளது.
கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு வளாகத்தின் அதிகாரிகள், விபத்துக்குள்ளான பவுசரில் மீதமிருந்த எரிபொருளை, பவுசர் வாகனங்களைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் ராஜபக்ஷ



20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025