2025 ஜூலை 23, புதன்கிழமை

பஸ் சேவை வேண்டுமென கோரிக்கை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா நகரிலிருந்து ஹட்டன் நகருக்குச் செல்ல, மாலை 6 மணிக்குப் பின்னர் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாமையால், தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக, பயணிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

ஏனைய வாகனங்களை வாடகைக்கு அமர்த்திச் செல்ல முற்பட்டாலும், முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் விடுக்கும் அச்சுறுத்தல் காரணமாக, பயணிகளை ஏற்றிச்செல்ல ஏனைய வாகன சாரதிகள் முன்வருவதில்லை என பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களை இரவு 8 மணிவரை சேவையில் ஈடுபடுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டுமென,  பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .