2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பஸ் தரிப்பிடம் இன்மையால் மக்கள் அவதி

R.Maheshwary   / 2022 ஜூலை 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியின் கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகில் அமைகப்பட்டுள்ள  பஸ்தரிப்பிடம் பல குறைபாடுகளுடன் காணப்படுகின்றது.

குறிப்பாக கிளங்கன் வைத்தியசாலைக்கு வருகை தரும் மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட் பிரதேசத்தை சேர்ந்த மக்கள் குறித்த பஸ்தரிப்பிடத்தை பயன்படுத்தும் நிலையில், இந்த பஸ் தரிப்பிடம் மோசமான நிலையில் இருப்பதாகவும் இதனால் மழை, கடும் வெயில் நேரங்களில் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்த பஸ் தரிப்பிடம் உரியமுறையில் பராமரிக்கப்படுவதில்லை என்றும் இதனை  மக்கள் பயன்படுத்தும் வகையில்  சீர் செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X