Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தைக்கு பொருட்களை கொள்வனவுச் செய்யச் சென்ற பெண் ஒருவர் பஸ் ரயரில் சிக்கி படுகாயமடைந்த சம்பவமொன்று இன்று (29) பிற்பகல் கினிகத்தேனை பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேனை பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சந்தையில் பொருட்கள் வாங்கச் சென்ற பெண்ணொருவரே பஸ்ஸின் ரயரில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
லக் ஷபான – தாகம்பிட்டியில் இருந்து நாவலப்பிட்டிக்ககான சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, கினிகத்தேனை பஸ் நிலையத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்டு பெண் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுக்காயமடைந்த பெண் கினிகத்தேன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பஸ்ஸின் சாரதியை கைது செய்த கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago