Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இன்று (5) நடைபெற்ற 'ஜன பலய' ஆர்ப்பாட்டப் பேரணிக்கு, மக்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்குத் தயாராக இருந்த தனியார் பஸ்ஸின் மீது, பதுளையில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என, பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல - போகஹமடின்ன பிரதேசத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்காகத் தயார் நிலையிலருந்த பஸ்ஸின் மீதே, கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலக்கத்தகடுகள் அற்ற, கப் ரக வாகனத்தில் வந்த ஐவரே, இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, மேற்படி பஸ்ஸில் பயணிக்கவிருந்த 10 பேர், மற்றுமொரு பஸ்ஸில் ஏற்றி கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில், ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
34 minute ago