Kogilavani / 2017 ஜூலை 05 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}


சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி, ரம்புக்கன பிடவல உரோமன் கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில், 35 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத் தொகுதி, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால், நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
சப்ரகமுவ மாகாண சபை மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், தனவந்தர்கள், பிரதேச மக்கள் ஆகியோரின் அன்பளிப்பு நிதியின் மூலம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழேயே, மேற்படி பாடசாலையின் இரண்டு மாடி கட்டடத் தொகுதியும் நிர்மாணிக்கப்பட்டது. கட்டடத் திறப்புவிழாவின்போது, பாடசாலை மாணவர்களுக்கு என, ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .