2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பாடசாலை பஸ்ஸை எரித்தவர் ஒன்றரை வருடத்தின் பின்னர் சிக்கினார்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

தெரணியகல- மாலிபொட பொத்தெனிகந்த பிரதேசத்தில் தனியார் பாடசாலை ஒன்றுக்குரிய பஸ் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒன்றரை வருடத்தின் பின்னர் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

43 வயதான சந்தேகநபர், மாலிபொட- மஹயாய பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார் என தெரணியகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு, ஜூலை மாதம் 20ஆம் திகதி இரவு, குறித்த பஸ்ஸின் உரிமையாளரின் வீட்டுக்கு அருகில் பஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது, தீபரவல் ஏற்பட்டு, பஸ் முழுமையாக எரிந்து சாம்பலாகியது.

இந்த நிலையில், தெரணியகல பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, நேற்று முன்தினம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, நேற்று (4)  அவிசாவளை பதில் நீதவான் சம்பா முதலிகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து சந்தேகநபரை இந்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X