R.Maheshwary / 2021 நவம்பர் 12 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
இலங்கையின் அரசமொழிகளான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை பாடசாலை கல்வி ஊடாக மேம்படுத்தும் நோக்கில், கேகாலை மாவட்டத்தில் குறைந்த வசதிகளையுடைய பாடசாலை புத்தக நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கும் நடவடிக்கை, கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட 99 பாடசாலைகளில் சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி இந்த புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மொழி அறிவு மற்றும் தகுதியை மேம்படுத்தவும் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச மொழி கொள்கையை செயற்படுத்தி அரச பணியாளர்களின் சேவையை பயனுள்ளதாக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago