Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 28 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
6.ஆ.ரமேஷ்
மாணவர்களின் பிரயாணத்துக்கு உதவாத நிலையில் காணப்படும் நாவலப்பிட்டி - கெட்டபுலா, கடியன்லேன தமிழ் வித்தியாலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியைச் செப்பனிட்டுத் தருமாறு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடியன்லேன நகரிலிருந்து, சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் காணப்படுகின்ற இப்பாடசாலைக்குச் செல்லும் பிரதான வீதி, பல வருடங்களாகச் சேதமடைந்து, அவ்வீதியில் பயணிக்கவே முடியாதளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கும் பிரதேச மக்கள், இவ்வீதியை, பெட்டகன், மேமலை, கடியன்லேன போன்ற தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
அத்தோடு, வீதி ஒரங்களில், தட்டைப் புற்கள் வளர்ந்து, பிரதான வீதியை மூடுகின்றமையால், காடுபோன்று அப்பகுதி காணப்படுவதாகவும் இதனால், அதில் தனிமையில் பயணிக்கும் போது, அச்சநிலை தோன்றுவதாகவும், மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025