2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாடசாலையொன்றில் 8 மாணவர்களுக்கு தொற்று

R.Maheshwary   / 2022 ஜனவரி 18 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 8 பேரும் 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளனர்.

இதன் காரணமாக 10ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக்குரிய மாணவர்கள் கல்விக் கற்ற வகுப்புகளுக்கு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளதுடன், இன்று இப்பாடசாலைக்கு 150 மாணவர்கள் மாத்திரமே வருகைத் தந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்களில் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பை பேணியவர்கள் அனைவரும் சுய தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த 500 மாணவர்கள் வரையில் வீடுகளில் இருக்க பணிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .