2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பாதயாத்திரிகர்களால் 5 தொன் கழிவுகள் வீசப்பட்டுள்ளன

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

குமண தேசிய வனத்தின் பிரதான நுழைவாயிலிருந்து சிறிய கெபிலித்த தேவ்வாலயம் வரையான 18 கிலோமீற்றர் தூரத்தின் இரு புறங்களும் உக்காத பொலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட 5 தொன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டதென குமண தேசிய வனத்தின் பொறுப்பாளர் ஆர்.ஏ.டி.டி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் புனித பூமிக்கு பாதயாத்திரை மூலம் செல்லும் யாத்திரிகர்களுக்காக கடந்த 15 நாள்களும்  குறித்த தேசிய வனப்பகுதி திறக்க்கப்பட்டதன் பின்னர், இவ்வாறு கழிவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 நாட்களாக இக்கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு மேலதிகமாக 200 இராணுவத்தினரும் இந்த பணியில் ஈடுபட்டதாகவும் யுனிசெலா நிறுவனம் இதற்கான முழு ஒத்தழைப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குமண தேசிய வனத்தின் ஊடாக ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் இந்த மாதம் 5ஆம் திகதி வரை 28,838 யாத்திரிகர்கள் கதிர்காமத்துக்கு சென்றிருந்தனர்.

இவ்வாறு சென்ற யாத்திரிகர்களால் வீசப்பட்ட கழிவுகளில் அழிக்க்கூடிய கழிவுகள் வனப்பகுதிக்குள்ளே அழிக்கப்பட்டதாகவும் மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் வனத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாதயாத்திரிகர்கள் இரவு பொழுதைக் கழித்த பாகுராவ மற்றும் மடமெதொட்ட பகுதிகளிலிருந்தே அதிகமான கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .