Freelancer / 2023 மார்ச் 20 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை, பூனாகலை - கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும், அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், மண்சரிவு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, தமக்கு விரிவானதோர் அறிக்கையை முன்வைக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளிடம் இன்று (20) அமைச்சர் வலியுறுத்தினார்.
இவ்வனர்த்தம் தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்கவுள்ளார். அதன்மூலம் மக்களுக்குத் தேவையான அடுத்தக்கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தகையோடு, தனது அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்ட ஜீவன் தொண்டமான், உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு ஆலோனை வழங்கினார்.
அதன்பின்னர் பிரதேச செயலாளர், பாதுகாப்புத் தரப்பினர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், ட்ரஸ்ட் நிறுவன பிரதானிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய அமைச்சர், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பணிப்பு விடுத்தார்.
அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஏனைய இடங்கள் இருப்பின், அங்கு மக்கள் வாழ்வார்களாயின், அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார். (N)
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago