2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’பாதுகாப்பாக இருக்கவும்’

Gavitha   / 2020 நவம்பர் 02 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கு, பெருந்தோட்ட மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அறிவுறுத்தியுள்ளார்.

ஹட்டனில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 80 பி.சி.ஆர் முடிவுகள் 'நெகடிவ்' என வெளிவந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் எனினும், மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நீண்டகாலமாக குன்றும் குழியுமாகக் காணப்பட்ட  புஸ்ஸலாவ – புரொட்டப் பிரிவு வீதி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின்  வேண்டுகோளுக்கமைய, 414 மில்லியன் ரூபாய் புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (2) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

புரொட்டப் வீதியை வைத்து சிலர் அரசியல் செய்ததாகவும் எனினும் தனது தந்தையின் வேண்டுகோளுக்கமைய வீதியைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். வீதி புனரமைப்புப் பணிகள் இடம்பெறுகையில், நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால் வீதி அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும், தற்போதைய ஆட்சியின் கீழ் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன என்றுத் தெரிவித்த அவர், பெருந்தோட்டப் பகுதிகளில் 384 கிலோமீற்றர் தூரத்தைப் புனரமைப்பதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர் என்றும் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

நுவரெலியா - டன்சின் பாதை, கெமினிதன் வீதி என்பனவும் நிச்சயம் புனரமைக்கப்படும் என்றும் வரவு - செலவுத் திட்டத்தில் இவற்றுக்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

'இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்றும் வழங்கினோம், இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன. பணிகள் தொடரும்' என்றார்.

ஹட்டனில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அவர், நகரத்தை மூடுமாறு வர்த்தகர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய வர்த்தகர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X