R.Maheshwary / 2021 நவம்பர் 14 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
எவ்வித அனுமதியும் இன்றி, ட்ரோன் கமெராவைப் பயன்படுத்தி, விக்டோரியா நீர்த்தேக்கம் உள்ளிட்ட சில பாதுகாப்பு வலயங்களை புகைப்படம் எடுத்த இருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கொத்தட்டுவ, களணி ஆகிய பகுதிகைளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று (13) காலை விக்டோரியா நீர்த்தேக்கம், இராணுவ முகாம் உள்ளிட்ட இடங்களை ட்ரோன் கமெராவால் புகைப்படம் எடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு அண்மையிலுள்ள இராணுவ முகாமிலுள்ளவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனினும் மாபெரிதன்ன- விக்டோரியா கோல்ப் மைதானத்துக்கு அருகில் உள்ள ஹோட்டலின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவே, இதனைப் புகைப்படம் பிடித்த்தாக குறித்த இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த இருவருக்கும் வீடியோ எடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஹோட்டலின் முகாமையாளரும் விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த ட்ரோன் கமெரா இயந்திரக் கோளாறு காரணமாக இராணுவ முகாமின் கூரை மீது உடைந்து விழுந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், இவர்களை இன்று (14) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
23 minute ago
32 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
49 minute ago
2 hours ago