2024 மே 03, வெள்ளிக்கிழமை

பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Janu   / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷுடைய  2024 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வார்விக் தோட்டம் கீழ்பிரிவு சரஸ்வதி வித்யாலயத்திற்கு  செல்லும் பாதை புனரமைப்பு பணிகள் சனிக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

நிகழ்வில் கருத்துரைத்த வடிவேல் சுரேஷ், 

ஒரு சமூகத்தின்  வளர்ச்சி கல்வியிலேயே தங்கியுள்ளது. வார்விக் சரஸ்வதி பாடசாலை குறுகிய காலத்தில் பாரியதொரு வளர்ச்சினை எட்டியுள்ளது. பாடசாலை வளர்ச்சிக்கு காரணமாக அமைந்த அதிபர் ஆசிரியர்களை பாராட்டுவதோடு  மலையக பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கு என்னுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம்  அபிவிருத்தி வேலை திட்டங்கள் மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வரலாற்றின் முதன்முறையாக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மலையக பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது."  என தெரிவித்துள்ளார் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .