R.Tharaniya / 2025 ஜூன் 30 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா லூஷா வங்கி ஓயா ரதல்ல, நானுஓயா ஆகிய இடங்களுக்கு செல்லும் வீதியில் கல்கந்த தோட்டத்தில் இருந்து தலவாக்கலை. மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு நீர் வழங்கல் அதிகார சபை அதிகாரிகளால் பிரதான வீதியை தோன்றி குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் தோண்டப்பட்ட காபெட் பாதையிலே சீர் செய்யாமல் கை விட்டு சென்றுள்ளனர் இதனால் பாதை மிகவும் மோசமான நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை இது சம்பந்தம் தொடர்பாக கதைத்த போதிலும் அவர்கள் முரண்பாட்டுக்கு வருவதாக தெரிவித்து.
இப்பாதையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புனரமைத்து தருமாறு கோரி இன்று காலை9 மணிமுதல் 12 மணிவரை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் இடம் பெற்றது பதாகைகளை ஏந்தியவாறு பிரதான வீதியில் பஸ் வண்டிகளை நிறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் 3 மணி நேரம் இடம்பெற்றது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது பாதையினை முறையாக சீர்த்திருத்தம் செய்து தருமாறு இதன் போது கோரிக்கை விடுத்தனர்.


எஸ் சதீஸ்
9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago