Yuganthini / 2017 ஜூன் 20 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிலரி, டியன்சின் பிரதான வீதியின் சுமார் 4 கிலோமீற்றர் வரையான தூரத்தை செப்பனிடுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 18 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை வீதி அபிவிருத்தி செய்யப்படாதுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பாதையை அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடைபெற்றது. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ ஆகியோர் இணைந்து, அடிக்கல்லையும் நாட்டி வைத்தனர்.
இப்பாதை செப்பனிடப்பட்டு, 6.12.2017ஆம் ஆண்டு கையளிக்கப்படும் என்று, அறிவித்தல் பலகையும் போடப்பட்டுள்ளது. எனினும், இதுவரை பாதை அபிவிருத்திக்கான முதற்கட்ட வேலைகள்கூட ஆரம்பிக்கப்படவில்லை என்று, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாதையானது குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், மழை காலங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .