Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஆயிரம் பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலத்துக்கு செல்லும் பிரதான பாதையை, செப்பனிட்டுத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹட்டன் - நோட்டன் பிரதான வீதி, காசல்ரீ சந்தியிலிருந்து குடா மஸ்கெலியா சந்திவரை செல்லும் 350 மீற்றர் நீளமான குறுக்குப்பாதை நீண்டகாலமாக குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நோட்டன் காசல்ரீ பிரதேசத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், காசல்ரீ, டங்கல் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் குறித்தப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, மாணவர்களின் நன்மையை கருத்திற்கொண்டு இப்பாடசாலையை புனரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் குறித்த பாதையை செப்பனிடுவதற்கு, நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .