சுஜிதா / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்துக்குட்ட தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில், 700 மாணவர்களும் 35 ஆயிரியர்களும் இருந்து வரும் நிலையில், இவர்களுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில், கடந்த பல வாரங்களாக பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குடிநீருக்கு மாத்திரமன்றி, பாடசாலையின் அன்றாடத் தேவைகளுக்குக் கூட, நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நீரைப் பெற்றுக்கொள்வதற்கு, அரச சார்பற்ற நிறுவனமொன்றால், நீர் விநியோகத் திட்டமொன்று நிர்மாணிக்க ப்பட்டுள்ளப் போதிலும், அந்நீரைப் பெற்றுக்கொள்வதில், அப்பிரதேசத்திலுள்ள சில மக்கள் இடையூறு விளைவித்து வருவதாக, பாடசாலைச் சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, குறித்த மக்களுடன் பல தடவை கலந்துரையாடியுள்ள போதிலும், தொடர்ச்சியாக பாடசாலைக்கு நீர்க் கிடைக்கவிடாது இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாடசாலைக்குக் காணப்படும் இப்பிரச்சினையை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் என, பாடசாலைச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago