Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.சுஜிதா, எஸ்.கௌசி
தலவாக்கலை சென்கிளையார் தோட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமான அரை ஏக்கர் காணியை, அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நேற்று (9) காலை கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் லெட்சுமணன் பாரதிதாஸன், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி உறுப்பினருக்கு எதிராக, தோட்ட நிர்வாகம் தலவாக்கலை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே, அவர், நேற்று(9) காலை கைதுசெய்யப்பட்டார்.
இவரை, நுவரெலியா மாவட்ட நீதவான் பிரமோத ஜெயசேகர முன்னிலையில், நேற்று (9) மதியம் ஆஜர்படுத்திய போது, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும், ஹட்டன் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றுக்காக, மேற்படி உறுப்பினருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 21ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும், ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜரான சான்றிதழை, எதிர்வரும் 28ஆம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
'எனக்கு சம்பந்தமில்லை'
தலவாக்கலை சென்கிளையார் தோட்டக் காணி சுவீகரிப்புக்கும் தனக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்றுத் தெரிவித்துள்ள தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் இ.தொ.கா உறுப்பினர் லெட்சுமணன் பாரதிதாசன், அரசியல் காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள், தன்மீது சேறுபூசுவதற்காக, இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சாடினார்.
சென்கிளையார் தோட்டக் காணி சுவீகரிப்புத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தலவாக்கலை-லிந்தலை நகரசபையின் தலைவர் பாரதிதாசன் மேலும் கூறுகையில்,
மக்களின் பிரதிநிதி என்றவகையில், சென்கிளையார் காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளை, தான் கேட்டறிந்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago