Freelancer / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காந்தி சௌந்தராஜன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக அரசியல் - தொழிற்சங்க - சமூக - மற்றும் சர்வதேச செயற்பாட்டாளரான பாரத் அருள்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள், திங்கட்கிழமை (03) வழங்கி வைக்கப்பட்டன.


காந்தி சௌந்தராஜன் இதற்கு முன்னர் பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அதிகார சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராகவும் பாரத் அருள்சாமி பதவி வகிக்கின்றார். அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
43 minute ago
52 minute ago