2026 ஜனவரி 21, புதன்கிழமை

பாலத்தைப் புனரமைத்துத் தரக் கோரிக்கை

Ilango Bharathy   / 2021 ஜூன் 20 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ந. மலர்வேந்தன்

பதுளை- வேவெஸ்ஸ தோட்டத்தின் தெபேவத்த பிரிவுக்குச் செல்லும் நடைபாதை பாலமொன்று
3 வருடங்களாக சேதமடைந்துள்ளது.

3 வருடங்களுக்கு முன்னர், குறித்த பாலத்துக்கு அருகிலிருந்த பாரிய மரமொன்று தோட்ட
நிர்வாகத்தால் வெட்டப்பட்ட போது, மரம் பாலத்தின் மீது விழுந்ததால் பாலம்
சேதமடைந்த்துடன், பாலத்துக்குக் கீழே காணப“புடும் கற்களும் அவ்வப்போது சரிந்து விழும்
நிலையில், சேதமடைந்த பாலத்தை புனரமைக்க தோட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.



இதனால் அப்பாலத்தைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை
பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கும் இந்த விடயத்தை கொண்டு வந்துள்ளனர்.

எனினும், இதுவரை எவரும் இப்பாலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என
தெரிவித்துள்ள வேவஸ்ஸ தோட்ட மக்கள், இப்பாலத்தை உடனடியாக புனரமைத்து தருமாறு
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X