Janu / 2023 ஜூலை 18 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறார்களின் மனங்களை கவரும் வகையில், கண்டி நகரில் ஒரு பெரிய காட்சியறையை நடத்தி, மனித பாவனைக்கு உதவாத, காலவதியான இனிப்புப் பண்டங்களை விற்பனை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. டொபி, சொக்கலேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களை மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்ட விற்பனை நிலையம், கண்டி மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
அதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த இனிப்பு பண்டங்களில், உற்பத்தித் திகதி மறைக்கப்பட்டு, காலவதியான திகதி மாற்றப்பட்டு, விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. அதன்பின்னர், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago