2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரஜா சக்தி அமைப்பின் புதிய முயற்சி

Ilango Bharathy   / 2021 ஜூலை 25 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

”மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜா சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

நேற்று (24) ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்த முறைப்பாடுகளை அறிவிக்கவோ, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவோ, பாதுகாப்புக்காகவோ விசேட தொலைபேசி இலக்கங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல் பொதுமக்களும் 07155500666, 0512222422 ஆகிய  இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தங்களது ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

இதனூடாக 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்தவர்களுக்கு எதிராகவும், அச்சுறுத்துக்குள்ளான தொழில்களுக்கு அமர்த்தவதற்கும் அதற்கு சம்மந்தப்பட்ட தரகர்களுக்கு எதிராகவும் இதனூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அரச உயர் சபைகளோடு  இந்த நடடிவக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் தோட்ட முகாமைத்துவம் மற்றும் கிராம சேவகரின் ஊடாக அந்தந்த இடங்களில் இருந்து 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் எங்கு வேலைகளுக்கு சென்றுள்ளார்கள் என தகவல்கள் திரட்டப்பட்டு அது குறித்து ஆராயப்படும்.

மேலும் பாடசாலைகளை விட்டு இடை விலகும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி மீள் கற்கை ஆரம்பித்தல், அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகள் வழங்கல் தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரி ஊடாக இலவச கல்வி வழங்குதல் உள்ளிட்ட பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .