2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’பிரஜா வித்யா’ கல்வி வேலைத்திட்டம் ஆரம்பம்

R.Maheshwary   / 2021 ஜூன் 07 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொரோனா பரவல்  காரணமாக  மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்றக்கொள்ள பல சவால்களை எத்ரிக்கொள்ளும் நிலையில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின்  எண்ண கருவிற்கமைய, நாம் பிரஜாசக்தி செயல்திட்டத்தின் ஊடாக 'பிரஜா வித்யா' கல்வி வேலைத்திட்டம் ஆரம்பித்துள்ளோம் என பிரஜாசக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி  தெரிவித்தார்.

இவ் விசேட கல்வி வேலைத்திட்டத்தின் ஊடாக,   பல பாடநெறிகள் இலவசமாக பிரஜாசக்தி பேஸ்புக் தளத்தின் ஊடாக நேரடியாக தினமும் பதிவேற்றப்படும். மாணவர்களின் கல்வியை இலகுவாக்குதே எமது நோக்கம். கற்பித்தலில் ஆர்வமுள்ளோரும் எம்முடன் இணைந்துக்கொள்ளலாம் என தெரிவித்த பாரத், நேரடியாக மாணவர்கள் தமக்கு தேவையான கேள்விகளையும் ஆசிரியர்களிடம் கேட்டு பயன்பெறும் மென்பொருள் ஒன்றின் ஊடக இன்னும் சிறப்பாக நாம் இச்சேவையை வழங்க உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் யூ டியூப் தளம் வாயிலாகவும் இக் காணொளிகள் பதிவேற்றப்படும். மேலும் புலமை பரிசில் பரீட்சை சாதாரணதரம் மற்றும் உயர் தரம் ஆகிய பாடத்திட்டங்களில் நாம் விசேட கவனம் செலுத்தி  உள்ளோம் எனவும் மேலும் பல பாட நெறிகளை நாம் வழங்க உள்ளோம் எனவும்   https://www.facebook.com/prajashakthi.official மேலதிக தகவல்களுக்கு தளத்திற்கு பிரவேசிக்குமாறும் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .