2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பிரதமரின் பெயர்ப்பலகைக்குச் சேதம் விளைவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

நாவலப்பிட்டி நகரில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர்ப்பலகையை, இனந்தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர் என்று, நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில், இன்று (29) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பிரதமரை வரவேற்கும் வகையில், நாவலப்பிட்டி நகர சபையின் அனுமதியுடன்,  நகரில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைக்கே, இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுளதென, நகரசபையின் தலைவர் சசங்க சம்பத்சஞ்சே, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றும், நகரிலுள்ள வியாபார நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீடிவியுடன் உதவியுடன், சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .