Janu / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் இல; 02 தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபருக்கு வழங்கப்பட்ட விடுதியை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (12) உத்தரவிட்டுள்ளதுடன் இருவருக்கு (தாய்,மகன்) பினை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் இல; 02 தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபரின் விடுதிக்குள் நுழைந்து விடுதியில் இருந்த மடிக்கணினி , தங்க ஆபரணங்கள், மற்றும் எரிவாயு நிரப்பும் சிலிண்டர் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் (தாய்,தந்தை,மகன்) செவ்வாய்க்கிழமை (11) அன்று கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களின் வீட்டை சோதனையிட்ட போது களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
எஸ் . சதீஸ்

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago