2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பிரதி பிரதான செயலாளராக கமல் புஸ்பகுமார நியமனம்

Kogilavani   / 2020 நவம்பர் 03 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் பிரதி பிரதான செயலாளராக (நிர்வாகம்) கமல் புஸ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால்,  வழங்கி வைக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைகழகத்தில் புவியியல்துறையில் பட்டம் பெற்ற அவர், களனி பல்கலைகழத்தில் சமூகவியல்துறையில் பட்டமேற் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார்.

2003 ஆம் இலங்கை அரச நிர்வாக சேவையில் இணைந்துகொண்ட கமல் புஸ்பகுமார, அயகம பிரதேச செயலகத்தின் உதவி செயலாளராகவும் இரத்தினபரி மாவட்டச் செயலகத்தின் உதவி செயலாளராகவும் மற்றும் அயகம, ஹொரண, இங்கிரிய, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் செயலாளராகவும் மற்றும் பிரதி சுகாதார பணிப்பாளராகவும் (நிர்வாகம்) சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X