2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’பிரதேச உறுப்பினர்களை புறக்கணிக்க இடமளியேன்’

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட  பிரதேசங்களில்  முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி முன்னெடுப்பு நிகழ்வுகளில், பிரதேசசபை உறுப்பினர்களைப் புறக்கணிக்க இடமளிக்கப்போவது இல்லை என்று, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு,  சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், நானுஓயா பிரதான காரியாலய கூட்ட மண்டபத்தில், நேற்று முன்தினம்(9) நடைபெற்றது.  

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர், பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி வேலைத் திட்டங்கள் தொடர்பான ஆரம்ப நிகழ்வுகளில் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் கௌரவ குறைச்சலுக்கு ஆளாகுவதாகவும் தவிசாளரின்  கவனத்துக்குக் கொண்டுவந்தனர். 

இதற்கு பதிலளித்த தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா பிரதேச சபையின் அனைத்து உறுபினர்களின் கௌரவத்தையும் பாதுகாப்பது, தனது கடமை என்றும் இனிவரும் காலங்களில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி தொடர்பான அரசாங்க நிகழ்வுகளில், சபை உறுப்பினர்களுக்கும் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X