2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

பிரதேச சபை தலைவர் மீது முறைப்பாடு

Janu   / 2025 ஒக்டோபர் 16 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொகவந்தலாவ நகரத்தில் விசேட ஒளிபரப்பு சேவையை வழங்கும் அனுமதியை தேசிய மக்கள் சக்தியை சார்ந்த ஆதரவாளருக்கு வழங்கியமை தொடர்பாக நோர்வூட் பிரதேச சபை தலைவர் பிரான்ஸிஸ் ஹேலனுக்கு எதிராக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (14) அன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொகவந்தலாவ நகரில் விசேட ஒளிபரப்பு சேவையை மேற்கொள்வதுடன் அதற்காக  பிரதேச சபை ஊடாக விலை மனு கோரிக்கை முன் வைத்து அதனூமாக    உரிய நபர்கள் நியமிக்கப்பட்டதாகவும் இம்முறை நோர்வூட் பிரதேச சபையின் தலைவரின் கட்சியை சார்ந்த ஒருவருக்கு  தனிப்பட்ட ரீதியில் ஒளிபரப்பு சேவையை வழங்கியுள்ளதாகவும் முறைப்பாட்டின் ஊடாக தெரியவந்துள்ளது.

இது போன்ற செயற்பாடுகளுக்கும் ஏனைய வியாபார ஸ்தலங்களை நிறுவுவதற்கும் விலைமனுக்களை கோறுவதன் ஊடாக அதற்கான அனுமதியினை வழங்குவது பிரதேச சபையின் சட்டத்திட்டங்கலாகும்.

இவ்வாறான சட்ட திட்டங்கள் பிரதேச சபையில் காணப்படுகின்ற நிலையில் அரசியல் பலத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு தனிப்பட்ட ரீதியில் பிரதேச சபை தலைவர் செயற்படுவது பொருத்தமற்றது எனவும் அதில் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இது போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது எனவும் இதற்கு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் 

 எஸ் சதீஷ் 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .