2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச சபையால் பாதுகாப்பு நடவடிக்கை

Gavitha   / 2020 நவம்பர் 30 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்டம் மற்றும் பூப்பனை கீழ்ப்பிரிவு தோட்டம் ஆகியவற்றில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருவர், நேற்று (29) அடையாளம் காணப்பட்ட நிலையில், கந்தப்பளை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபையின் கந்தபளை காரியாலயத்தில், இன்று (30) காலை, விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களும் ஹம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கலந்துரையாடலில், 29ஆம் திகதி காலை முதல் 49 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகள், கந்தப்பளை நகர வர்த்தக சங்கத்தினரால், பிரதேச சபையூடாக வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

அத்துடன்,  நுவரெலியா கோட்டக்கல்வி திணைக்களத்துடன் கலந்துரையாடி, பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கந்தப்பளை நகரில் ஒலிபெருக்கி பொறுத்தப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், தோட்டங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு, அவதான அறிவிப்புகள் விடுக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அத்துடன் நுவரெலியா பிரதேச சபையூடாக, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை, கந்தப்பளை பிரதேசத் தோட்டங்களுக்கு கிருமித் தொற்று நீக்கிகள் தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X