2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பிரேரணை பிற்போடப்பட்டது

Yuganthini   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில், முச்சக்கர வண்டி சேவை பணியகத்தை அமைப்பது குறித்து சப்ரகமுவ மாகாண சபையில் இன்று (12) முன்வைப்படவிருந்த  பிரேரணை பிற்போடப்பட்டுள்ளதென, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

மேற்படி பணியகத்தை அமைப்பதற்கு தேவையான சட்டத்தில் மேலும் பல விடயங்களை உள்ளடக்கப்பட வேண்டுமெனக்கோரி முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், சப்ரகமுவ மாகாண சபைக்கு முன்பாக, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  கலந்துரையாடியதன் பின்னர்,  பிரேரணையை பிற்போடுவது தொடர்பில் சபையில் அறிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சங்கத்தினர் தமது கோரிக்கையை முன்வைத்து எழுத்துமூலமான கடிதம் ஒன்றையும் முதலமைச்சரிடம் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .