R.Maheshwary / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
தேயிலைத் தோட்டமொன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்றின் சடலமொன்று நேற்று (1) மாலை மீட்கப்பட்டுள்ளதென நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பிபாஸ் கருணாதிலக தெரிவித்தார்.
நோர்வூட்- பிலிங்போனி தோட்டத்திலிருந்தே குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கமையவே, இச்சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்த சிறுத்தை 6 வயதான ஆண் சிறுத்தை என்றும் குறித்த தோட்டத்தில் உலவும் மற்றுமொரு சிறுத்தையுடன் ஏற்பட்ட மோதலிலேயே இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையின் சடலம் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைகளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago