2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

பிளக்வோட்டர் தோட்டம் முடக்கம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ். எஸ்.கணேசன்

அம்பகமுவ பொதுசுகாதார பரிசோதகர் காரியலாயத்துக்கு உட்பட்ட கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டத்தைச் சேர்ந்த 29 பேர் உட்பட 35 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதால், மேற்படித் தோட்டம் முடக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

இன்று (8) காலை கிடைக்கப்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமையவே, 26 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பிளாக்வோட்டர் மேல், கீழ் பிரிவுகள், பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடன் முடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
பிளக்வோட்டர் தோட்டத்தில் 29 பேரும் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இருவருக்கும், நோட்டன் பிரிட்ஜ் தண்டுகலா பகுதியில் மூவருக்கும் வட்டவளை அகரவத்தையில் ஒருவருக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பிளக்வோட்டார் தோட்டத்தில் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் 400 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதர அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X