Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2023 ஜூலை 10 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிள்ளையாருக்கு சுழி போட்டவருக்கு வலை
கோவிலில் இருந்த உண்டியலை எடுத்துச் சென்று, அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெற்று உண்டியலை கொண்டுவந்து அவ்விடத்திலேயே வைத்துவிட்டுச் சென்ற சம்பவமொன்று ஹட்டன்-டிக்கோயாவில் இடம்பெற்றுள்ளது.
டிக்கோயா-வனராஜாவில் உள்ள விநாயகர் கோவிலுக்குள் இருந்த உண்டியலையே திங்கட்கிழமை (10) அதிகாலையில் ஒருவர் எடுத்துச் சென்று, மீண்டும் கொண்டுவந்து வைத்துள்ளமை சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் கோவிலுக்கு வந்தவர், முன்னால் இருந்த இரும்பு படலையை உடைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்துள்ளார்.
அங்கிருந்த உண்டியலை வெளியே எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துவிட்டு, வெற்று உண்டியலை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
உடைக்கப்பட்ட உண்டியலின் பூட்டு, கோவிலுக்கு முன்பாக ஓடும் ஹட்டன் ஓயாவில் கிடந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒருதடவை உண்டியலை திறந்து, காணிக்கைகளை எடுத்துக்கொள்வதாகவும், அக்காலப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுப்பதாகவும் கோவில் பூசகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு கமெராவில் பதியப்பட்டுள்ள காட்சிகளை வைத்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ,எம். கிருஸ்ணா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago